2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு விளையாட்டுத்துறை பணிப்பாளராக அஸீம்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்லம் எஸ். மெளலானா

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எஸ்.எம். அஸீம், மாகாண ஆளுநர் பேராசிரியர் நந்தலால் ரத்னசேகரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸீமுக்கான நியமனக் கடிதமானது திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து திங்கட்கிழமை (15)  ரத்னசேகரவால் வழங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து அஸீம் தனது கடமைகளை அன்று பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அஸீமுக்கு இப்பதவியுயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட அஸீம், 2020 மார்ச் மாதம் தொடக்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் அதனைத் தொடர்ந்து 2022 ஜனவரி முதல் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இதன்போது சிறிது காலம் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான அஸீம், சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X