2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கொடி கம்பங்கள் கையளிப்பு

Freelancer   / 2023 நவம்பர் 15 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் லெஜென்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இராப்போசனத்துடன் கூடிய விஷேட கலந்துரையாடல் ஒன்று, புத்தளம் ரையான் மஹாலில் அண்மையில் இடம்பெற்றது.

லெஜன்ட்ஸ் கழகத்தின் முகாமையாளர் முஹம்மது யமீன், 47,000 ரூபாய் பெறுமதியான கால்பந்தாட்ட கோல் கம்பத்துக்கான வலை மற்றும் தொடர் கொடி கம்பங்களை இதன்போது புத்தளம் லீக்கிடம் கையளித்தார். 

அதேநேரம் புத்தளம் விம்பிள்டன் கழகத்தின் முன்னை நாள் வீரரான மர்ஹும் ஜனாப்பின் நினைவாக நடாத்தப்படவுள்ள அணிக்கு 9 பேர் கொண்ட கால்பந்தாட்டத் தொடருக்கான பூரண அனுசரணையை லெஜன்ட்ஸ் கழகம் பொறுப்பேற்றுள்ளதோடு இதற்கான மொத்த பரிசுத் தொகையான 80,000 ரூபாய் பெறுமதியான காசோலையும் புத்தளம் லீக்கிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X