Editorial / 2017 ஜூலை 01 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே கண்ணன்




திக்கம் மத்திய சனசமூக நிலையம், தமது வைர விழாவினை முன்னிட்டு நடாத்திய, யாழ். மாவட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில், அராலி களுவாத்துறை விளையாட்டுக் கழக அணி சம்பியனாகியது.
குறித்த தொடரின் இறுதிப் போட்டி, திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில், நேற்று (30) நடைபெற்றது.
இறுதிப் போட்டியில், யாழ். வின்ஸ்ரார் அணியை எதிர்த்து, அராலி களுவாத்துறை விளையாட்டுக் கழக அணி மோதியது.
போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய அராலி களுவாத்துறை விளையாட்டுக் கழக அணி, 28-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.
இறுதிப் போட்டியின் நாயகியாக, அராலி களுவாத்துறை அணியை சேர்ந்த பாலசுமதி தெரிவாகியதோடு, தொடரின் நாயகியாக, அமுதினி தெரிவாகினார்.
இத்தொடரில் மூன்றாமிடத்தை, அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி பெற்றது.
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago