Editorial / 2018 ஜூன் 07 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

வட மாகாண கல்வி திணைக்களத்தால் நடாத்தப்பட்ட வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான எறிபந்தாட்டத் தொடரில் துணுக்காய் கோட்டைகட்டிய குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி சம்பியனாகியது.
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் துணுக்காய் கோட்டைகட்டிய குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி மோதியது.
இப்போட்டியின் முதலாவது செட்டில் துணுக்காய் கோட்டைகட்டிய குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அணி 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆனால், இரண்டாவது செட்டில் பலத்த போராட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், தீர்கமாய் அமைந்த மூன்றாவது செட்டில் மீண்டும் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய துணுக்காய் கோட்டைகட்டிய குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அணி 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.
இத்தொடரில் மூன்றாமிடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி பெற்றது.
29 minute ago
35 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
56 minute ago
1 hours ago