Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும், சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தினுடனான நட்புரீதியிலான 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கண்காட்சி கிரிக்கெட் போட்டியும் சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலையில் நடைபெற்றது.
இக்கண்காட்சி போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழகத் தலைவர் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் பெற்றது. பதிலுக்கு 171 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 16 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களையே பெற்று 84 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழகத்தின் வீரர் சபீர் தெரிவானார்.
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026