Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மார்ச் 16 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எல்.எஸ். டீன்
உடற்பயிற்சி செய்வோம்; உடலாரோக்கியம் பேணுவோம் எனும் தொனிப் பொருளில் அக்கரைப்பற்று த வொல்கர் யூனியன் நடாத்திய மாபெரும் வருடாந்த நடைப் பயிற்சி போட்டி அக்கரைப்பற்று நீர்ப் பூங்காவில் அண்மையில் நடைபெற்றது.
25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 5,000 மீற்றர் நடைப் போட்டி, 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 2,500 மீற்றர் நடைப் போட்டி, ஆண்களுக்கான 5,000 மீற்றர் சீரான ஓட்டப் போட்டி, பெண்களுக்கான 2,500 மீற்றர் நடைப் போட்டி, 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான 2,500 மீற்றர் நடைப் போட்டி என்பன நடாத்தப்பட்டன.
த வொல்கர் யூனியன் ஸ்தாபகத் தலைவர் எம்.எச். ஜெய்னுடீன் தலைமையில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபைத் தலைவர் அதாஉல்லா அஹமட் ஸகி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான கிண்ணங்களையும், பணப்பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
கலந்துகொண்ட சுமார் 200 போட்டியாளர்களுக்கு த வொல்கர் யூனியன் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன், நிகழ்வை திறம்பட ஏற்பாடு செய்து நடாத்தியமைக்காக எம்.எச். ஜெய்னுடீன், பொறியியலாளர் வை.பி. ஹம்சா மற்றும் அதாஉல்லா அஹமட் ஸகி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
13 minute ago
17 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
4 hours ago
5 hours ago