Mayu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்ட பொலிஸ் அணிக்கும் மருதமுனை கடப்பாஸ் எப்.சி அணியினருக்கும் இடையிலான கண்காட்சி உதைபந்தாட்ட போட்டி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை(12) நடைபெற்றது.

இலங்கை பொலிஸ் அணிகளுக்கு இடையிலான பொலிஸ் வெற்றிக் கிண்ண சுற்றுப்போட்டி இடம் பெறுவதை முன்னிட்டு அம்பாறை மாவட்ட பொலிஸ் அணிக்குரிய மேலங்கியை வழங்கி வைக்கும் முகமாக இந்த சினேகபூர்வ உதைப்பந்தாட்ட கண்காட்சி போட்டி இடம்பெற்றது.

ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அம்பாறை பொலிஸ் அணி, கடப்பாஸ் எப்.சி அணியினருக்கு எதிராக மூன்று கோல்களை போட்டது. கடப்பாஸ் எப்.சி அணியினர் இரண்டு கோல்களை மட்டும் போட்டு ( 03:02 ) என்ற கோல் வித்தியாசத்தில் பொலிஸ் அணி சம்பியனாக தெரிவானது.

46 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago