குணசேகரன் சுரேன் / 2018 ஜூலை 11 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகளின் பரிசளிப்பு விழாவை புறக்கணிப்புச் செய்து சென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் செயற்பாடு தொடர்பில் விசாரணை செய்து, அதிபருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மகாஜனாக் கல்லூரியின் வீரரொருவர் போட்டியில் பங்குபற்றுவதற்கு குறித்த போட்டிகளின் இறுதி நாளான நேற்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தடைவிதித்தனர். குறித்த போட்டியாளர் பாடசாலையை விட்டு விலகியிருந்தார் உள்ளிட்ட காரணங்கள் கூறப்பட்டு அவரை போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதியளிக்கவில்லை. இதனால், முரண்பட்டுக்கொண்ட மகாஜனாக் கல்லூரியினர், தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் பங்கேற்காது புறக்கணிப்புச் செய்திருந்தனர்.
18 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago