Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. விஜயரெத்தினம்
மட்டக்களப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 33ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டிகள் மாவட்ட ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயல்பாடுகள் மீண்டும் மாவட்ட மட்டத்தில் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
அந்தவகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 33வது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டிகள் மாவட்ட ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டிகள் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றது. இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்ட 33 வது மாவட்ட மட்ட விளையாட்டு போட்டிகள் சுகாதார நடைமுறையின் கீழ் மாவட்ட இளைஞர் உத்தியோகத்தர்கள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்கள், விளையாட்டு வீர, வீராங்கனைகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆண்,பெண் இருப்பாளர்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .