R.Tharaniya / 2025 மார்ச் 13 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்பில் இடம் பெற்ற மாபெரும் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மண்னை வடக்கு பிரதேச செயலக அணியினரும், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அணியினரும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.
“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக - அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் இவ்வருடம் சர்வதேச மகளிர் தொனிப் பொருளில் அமைந்த இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதிஅனுசரணையில்இளைஞர்அபிவிருத்திஅகம்நிறுவனத்தின்அமுலாக்கஆதரவுன் இடம்பெற்றது.
இப்போட்டிமாவட்டசெயலக,பிரதேசசெயலக,பாடசாலைவலைப்பந்தாட்டவிளையட்டுவீரர்களுக்கிடையேமட்டக்களப்புவெபர்உள்ளகஅரங்கில்இடம்பெற்றுவந்தது.
போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா, மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்சனி சிறீகாந்த், காணிக்கு பொறுப்பான மாவட்டச் செயலாளர் நவரூபரஞ்சினி, மாவட்ட செயலக உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என். சனஞ்ஜெயன், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார் உட்பட, பிரதேச செயலாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள், நினைவுச் சின்னம் பணப் பரிசில்கள் என்பவற்றையும் வழங்கி வைத்தனர்.
இப்போட்டி நிகழ்வுகளில் 16 பாடசாலை அணிகளும், மாவட்ட செயலக அணியும், 9 பிரதேச செயலக அணிகளும் பங்குபற்றியிருந்தன.பலத்த போட்டிக்கு மத்தியில், பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டியில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் முதலாம் இடத்தையும், வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் சிசிலியா பெண்கள் கல்லூரி நான்காமிடத்தையும் தக்க வைத்துக் கொண்டன.
அதேவேளை, மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியினர் முதலாம் இடத்தையும், வவுணதீவு பிரதேச செயலக அணியினர் இரண்டாம் இடத்தையும் மாவட்ட செயலக அணியினர் மூன்றாம் இடத்தையும், வாகரை பிரதேச செயலக அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர்.










24 minute ago
32 minute ago
39 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
39 minute ago
45 minute ago