Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி. சுகிர்தகுமார்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட 64 கழகங்களை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று டீன் ஸ்டாரை வென்றே ஜொலிபோய்ஸ் சம்பியனானது.
சம்பியனான ஜொலிபோய்ஸுக்கு 100,000 ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற டீன் ஸ்டாருக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. தொடரின் நாயகனாக ஜொலிபோய்ஸின் தினேஸ், இறுதிப் போட்டியின் நாயகனாக அதேயணியின் சாந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
2 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago