2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

1286kg பீடி இலைகள் மீட்பு

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி - மாம்புரி பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் வெள்ளிக்கிழமை (04) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜயநிறுவனத்துடன் இணைக்கப்பட்ட மெரீன்படைப்பிரிவினால் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேடதேடுதல் நடவடிக்கையின் போதே பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர்.

இதன் போது சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 36 மூடைகளில் அடைக்கப்பட்ட 1286 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பெயரில் நபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்46 வயதுடையவர் எனவும் கொட்டுக்கச்சிய பகுதியைச் சேர்ந்தவர்  என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி என்பது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .