Editorial / 2026 மார்ச் 10 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்
தில்லையடி பகுதியில் அமைந்துள்ள 22 மஸ்ஜித்களின் (பள்ளிவாசல்கள்) ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், "புத்தளம் தில்லையடி மஸ்ஜித் சம்மேளனம்" ஞாயிற்றுக்கிழமை (08) அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புத்தளம் நகரக் கிளையின் வழிகாட்டலின் கீழ் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்மேளனம் பின்வரும் முக்கிய இலக்குகளை முன்வைத்துச் செயல்படவுள்ளது:
புதிய நிர்வாகத் தெரிவு
இந்நிகழ்வின் போது சம்மேளனத்திற்கான புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்:
இந்த ஆரம்ப விழா நிகழ்வில் தில்லையடிப் பிரதேச உலமாக்கள் மற்றும் 22 மஸ்ஜித்களின் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி, செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானி, உப செயலாளர் அஷ்ஷேக் இமாம்தீன் அஷ்ரபி, உறுப்பினர்களான அஷ்ஷேக் ரகீப் ரஷாதி, அஷ்ஷேக் ஹஸ்பான் ஸாபிதி மற்றும் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ரஷாதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சமுதாய ஒற்றுமையை பலப்படுத்தி, மார்க்க மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுக்க இச்சம்மேளனம் ஒரு வலுவான தளமாக அமையும் என இதன்போது நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.




16 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago