2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

5 கோடி பெறுமதியான மீன்பிடி வலைகள் மீட்பு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மீன்பிடி வலைகள் புதன்கிழமை (17) அன்று அதிரடிப்படை மற்றும் புத்தளம் நீரியல் வளத்துறைஅதிகாரிகள் இணைந்து கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவரைகைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மீன்பிடி வலைகள்ஐந்துகோடிரூபாவுக்கும் அதிகபெறுமதியுடையது எனபுத்தளம் நீரியல் வளத்துறைபிரதிப் பணிப்பாளர் சரத்சந்தநாயக்க தெரிவித்தார்.

மீன்பிடி மற்றும் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வாழ் வளச்சட்டத்தின் கீழ்மீன்பிடித்தல் மற்றும் நீர்த்தேக்கங்கள் மற்றும் குளம் மற்றும் கடல் எல்லைகளில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்ட சுமார் 5000 கிலோ கிராமிற்கும் அதிகமான நைலூன்தங்கூஸ் வலை கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு புலனாய்வு சேவைவழங்கிய புலனாய்வுத் தகவலின்படி, புத்தளம் அதிரடிப்படை மற்றும் புத்தளம்  புத்தளம் நீரியல் வளத்துறைஅதிகாரிளும் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

தடை செய்யப்பட்ட தங்கூஸ் வலைகள் நாகவில்லு பிரதேசத்தில் உள்ள மூடிய இரண்டு மாடிக்கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

நாட்டில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட இந்ததங்கூஸ் வலை கள்இந்தியாவில் இருந்து மீன்பிடி படகுகள் மூலம்சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு இரகசியமான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக விசாரணைகள் மூலம்தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட தங்கூஸ் வலைகளை மேலதிக விசாரணைக்காக புத்தளம் நீரியல் வளத்துறைஅலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் , வழக்குதாக்கல் செய்யப்பட்டு அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என புத்தளம் நீரியல் வளத்துறைபிரதிப் பணிப்பாளர் சரத்சந்தநாயக்க தெரிவித்தார்.

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X