Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 16 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மருந்துப்பொருட்கள் உற்பத்தியாளர் சம்மேளனம் (SLPMA), வரலாற்று ரீதியில் முக்கிய நடவடிக்கையாக, சகல பங்காளர்களும் ஒன்றிணைந்து, இலங்கையை நம்பிக்கை வாய்ந்த, உயர்தரமான மற்றும் நிபுணத்துவ ரீதியில் செயற்படுத்தப்படும் மருந்துப் பொருட்கள் உற்பத்தி மையமாக திகழச்செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அழைப்பை மேற்கொண்டுள்ளது.
இலங்கையை உள்நாட்டு மருந்துப் பொருட்கள் தொழிற்துறையை கட்டியெழுப்பச் செய்வது தொடர்பில் அழைக்கும் நிகழ்வை SLPMA அண்மையில் “அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் – இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தேசியஅழைப்பு” எனும் தொனிப்பொருளை அறிமுகம் செய்து முன்னெடுத்திருந்தது.
சம்மேளனத்தின் வருடாந்த பொது ஒன்று கூடலுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் போது ஒன்றிணைந்த, பல-பங்காளர் கலந்துரையாடலினூடாக, இலங்கையின் மருந்துப் பொருட்கள் உற்பத்தித்துறையை தன்னிறைவான, ஏற்றுமதிக்கு தயாரான துறையைாக கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுப்பதாக அமைந்திருந்தது.
மாலைப்பொழுதின் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக, SLPMA இன் தேசிய கொள்கை பிரேரணையை முறையாக கையளிப்புச் செய்யப்பட்டிருந்தமை அமைந்திருந்தது. அதில் இலங்கையின் மருந்துப் பொருட்கள் உற்பத்தித் துறையை கட்டியெழுப்புவது,
அதன் எதிர்காலத்துக்கான தூர நோக்கு மற்றும் செயற்படுத்தக் கூடிய பரிந்துரைகள் போன்ற பல அம்சங்கள்அடங்கியிருந்தன. அரசாங்கத்தின் பிரதான அதிகாரிகளிடம் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டதுடன்,
இலங்கையின் சுகாதார பராமரிப்பு மற்றும் தொழிற்துறை விருத்தியில் புதிய மாற்றத்துடனான அத்தியாயத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது.
நிகழ்வின் தொனிப் பொருளான “அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் – இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தேசிய அழைப்பு” என்பதன் பொருளை இந் நிகழ்வு வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
தன்னிறைவான மருந்துப் பொருட்கள் தொழிற்துறையை கட்டியெழுப்புவதனூடாக, பொதுச்சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்தல், மருந்துப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், அந்நியச் செலாவணியை சேமித்தல்,
தொழினுட்ப தொழில் வாய்ப்புகளை உருவாக்கல் மற்றும் ஏற்றுமதிகளை முன்னெடுத்தல் போன்ற நீண்டகால கொள்கைகளுடன் தொடர்புடைய தொழிற்துறை வளர்ச்சி மற்றும் சுகாதாரசார் முன்னுரிமைகளை இலக்காகக்கொண்டதாக இந்த செயற்பாடு அமைந்திருந்தது.
கொள்கை வடிவமைப்பாளர்கள் முதல் தொழிற்துறை முன்னோடிகள் வரை சகல துறைசார் பங்காளர்களையும் இணைத்து, துரித, இலங்கைக்காக தன்னிறைவான மருந்துப்பொருட்கள் தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்கு SLPMA எதிர்பார்க்கிறது.
SLPMA இன் தலைவர் நளின்கன்னங்கர குறிப்பிடுகையில்,
“எமது பயணத்தில் இன்றைய தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. பல சவால்களுக்கு மத்தியிலும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக செயலாற்றி, மீட்சியுடன் இயங்கி வண்ண முள்ளனர். ஆனாலும், இந்தத் தொழிற்துறை அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தவில்லை.
சரியான கொள்கை தொடர்ச்சித் தன்மை மற்றும் ஒழுங்குபடுத்தல் பின்புலத்துடன், நிலைத் திருக்கும் நீண்ட கால மருந்துப் பொருட்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய துறையை எம்மால் கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
பிரதான தொழிற்துறை அம்சங்களை வெளிப்படுத்தும் உயர்மட்ட குழுநிலை கலந்துரையாடலையும் இந் நிகழ்வு கொண்டிருந்தது.
இதில் இலங்கை ஜனாதிபதியின் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்ப சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர். கோமிக உடுகம் சூரிய, தொழிற்துறை மற்றும் தொழில் முயற்சியாண்மை விருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தவிசாளர் வைத்தியர். ஆனந்த விஜேவிக்ரம, அரச மருந்துப் பொருட்கள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் பேராசிரியர். ஜயந்த விஜய பண்டார மற்றும் SLPMA இன் தலைவர் நளின் கன்னங்கர ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஐந்து மாற்றியமைப்பு அரண்களின் அடிப்படையில் பரந்த தேசிய மூலோபாயத்தை கட்டியெழுப்புவது பற்றிய அம்சங்களை SLPMA இன் பிரேரணை கொண்டுடிருந்தது. உறுதியான கொள்கை ஆதரவு, சாத்தியக் கூறான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்புகள்,தரம் மற்றும் நேர்மைக்கான தொழிற்துறையின் அர்ப்பணிப்பு, மனித திறமையை கட்டியெழுப்பல் மற்றும் ஆய்வு மற்றும் ஆதரவளிக்கும் தொழிற் துறைகளில் முதலீடு போன்றன அவையாகும்.
SLPMA இன் உப தலைவர் தினேஷ் அத்த பத்து கருத்துத் தெரிவிக்கையில், “இது கொள்கை என்பதைப் பற்றியது மட்டுமல்ல, நோக்கம் மற்றும் பொறுப்புணர்வு என்பதைப் பற்றியதாகும்.
தொழிற் துறை எனும் வகையில், நாம் பொறுப்புக் கூர்பவர்களாக இருக்க வேண்டும் மற்றும் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு சரியான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
உயர் தரம் வாய்ந்த, சகாயமான சுகாதார பராமரிப்பு, எமது திறமைசாலிகளை தக்கவைத்துக் கொள்ளல் மற்றும் ஏற்றுமதிகளை அதிகரித்தல் போன்றவற்றை எய்துவதற்கான தெளிவான திட்டத்தை நாம் முன்மொழிந்துள்ளோம்.
இந்த தேசிய நோக்குக்கு இலங்கை முன்னேற்றம் காண்பதற்கு இன்னமும் காலம் தாமதமாகவில்லை என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.
1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SLPMA, இலங்கையின் உள்நாட்டு மருந்துப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் 25 பேரை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், இறக்குமதியில் பெருமளவு தங்கியிருக்கும் தொழிற்துறையில் தொடர்ந்தும் மீட்சியுடன் செயலாற்றுகிறது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், SLPMA அங்கத்தவர்கள் இலங்கையின் தேசிய சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பு அர்த்தமுள்ள வகையில் தொடர்ந்தும் பங்களிப்புகளை வழங்கிய வண்ண முள்ளனர்.
இலங்கையின் மருந்துப் பொருட்கள் சந்தையின் பெறுமதி சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருப்பதுடன், அரசாங்கத்தின் கொள்முதலினூடாக 40% கேள்வி நிவர்த்திக்கப்படுவதுடன், தனியார் துறையினூடாக 60% மேற்கொள்ளப்படுகிறது.
2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட உத்தரவாதமளிக்கப்பட்ட மீளக்கொள்வனவு உடன் படிக்கையின் பிரகாரம், உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்வது5% இலிருந்து சுமார் 30% ஆக உயர்ந்துள்ளது.
அதனூடாக நவீன உற்பத்தி உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதற்காக, 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான முதலீடுகளை மேற்கொள்ள தனியார் துறையை தூண்டியிருந்தது.
அரசாங்கத்தின் விநியோகத்தில் இவ்வாறான அதிகரிப்பு பதிவாகியிருந்த போதிலும், தனியார் துறையின் கேள்வியின் 5%ஐ மாத்திரம் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெறுவதுடன், இலக்கு வைக்கப்பட்ட கொள்கைக்கு ஆதரவளிப்பதனூடாக பெருமளவு வாய்ப்பை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.
அரசாங்கத் துறையில் முன்னேற்றம் பதிவாகிய போதிலும், தொழிற்துறை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளது. குறிப்பாக, தொடர்ச்சியாக கொள்கைக்கு போதியளவு ஆதரவின்மை மற்றும் மீளக்கொள்வனவு உடன் படிக்கைகள் காலாவதியாகும் அழுத்தம் போன்றன அவையாக அமைந்துள்ளன.
தொழிற்துறையின் உறுதித்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு தெளிவான தேசிய செயற்பாட்டுத்திட்ட மொன்றை நிறுவுவது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. மேலும்,
அதிகரித்துச் செல்லும்சர்வதேச உறுதியற்ற நிலைகள் மற்றும் அணுகக்கூடிய மற்றும் சகாயமான மருந்துப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துச் செல்வது போன்ற காரணிகளால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.
தற்போதைய பிரேரணையினூடாக இலங்கை அதன் உள்நாட்டுத்தேவையின்75% ஐ சுயமாக உற்பத்தி செய்வது பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதித் துறை மற்றும் 10,000க்கும் அதிகமான நேரடி மற்றும் மறை முகதிறன் படைத்த தொழில்வாய்ப்புகளைபாமசிஸ்ட்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் உற்பத்தி நிபுணர்கள் போன்றவர்களை அடுத்த 5 முதல் 10 வருடங்களுள் தயார்ப்படுத்துவதாக அமைந்திருக்கும்.
இந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசாங்க அமைச்சுகள், ஒழுங்குபடுத்தல் அமைப்புகள், அபிவிருத்தி முகவரமைப்புகள் மற்றும் தொழிற்துறை பிரதிநிதிகளைக் கொண்ட பல-பங்காளர் செயலணியை நிறுவுவி அளவிடக் கூடிய இலக்குகள் மற்றும் ஒழுங்கிணைக்கப்பட்டகொள்கை ஆதரவை உறுதி செய்ய SLPMA பரிந்துரைத்துள்ளது.
ஒவ்வொரு இலங்கையரும் பாதுகாப்பான, சகாயமான மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதில் முழுப்பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதில் SLPMA தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதனூடாக இலங்கையை பிராந்திய மருந்துப்பொருட்கள் உற்பத்தியின் முன்னோடியாகத் திகழச் செய்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
7 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
50 minute ago