2025 மே 12, திங்கட்கிழமை

’’ஆசிரியரை பணி நீக்கம் செய்’’

R.Tharaniya   / 2025 மே 11 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் ஆசிரியரை புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய எடுத்த தீர்மானத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை (09) புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

புத்தளம் மாவட்ட  மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவிக்கு நீதி கோரி பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல மகளிர் பாடசாலையின் முன் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலையின் ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மாணவியின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக குறித்த பாடசாலையில் இருந்து புத்தளம் சாஹிராக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் சாஹிரா கல்லூரி க்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எம்.யூ.எம்.சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X