Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 30 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை மாநகர சபையின் நடவடிக்கைகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவித்து, கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்து, இச்சபையின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவித்து, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலால் நேற்று முன்தினம்(28) புதிய வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள், நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஆணையாளரின் நிர்வாகமும் நேற்றிலிருந்து நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபை மேயருக்கு சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்காமை
காரணமாக, சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி ஊவா
மாகாண ஆளுநரால் பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
தற்போது பல இணக்கப்பாடுகளுடன் நிலைமை மாறியுள்ளதால், புதிய தீர்மானம் எடுத்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago