Editorial / 2026 மார்ச் 10 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களினால் உயிரிழந்த ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமனெயி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புத்தளம் நகரக் கிளை உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
ஈரானின் அதியுயர் தலைவரின் மறைவு குறித்துத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், அது தொடர்பான உத்தியோகபூர்வ இரங்கல் செய்தியையும் தூதரக அதிகாரிகளிடம் உலமா சபை உறுப்பினர்கள் திங்கட்கிழமை (09) அன்று கையளித்தனர்.
இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் புத்தளம் நகரக் கிளைத் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி, செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானீ, உப செயலாளர் அஷ்ஷேக் இமாம்தீன் அஷ்ரபி, உறுப்பினர்களான அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி, அஷ்ஷேக் ரகீப் ரஷாதீ, அஷ்ஷேக் ஹஸ்பான் ஸாபிதீ மற்றும் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ரஷாதீ ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஈரானிய தூதரக அதிகாரிகள் ஜம்இய்யாவின் இந்த விஜயத்தையும், அவர்கள் பகிர்ந்துகொண்ட ஆறுதல் செய்திகளையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர்.
16 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago