2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ஐஸூடன் இருவர் கைது

Janu   / 2025 ஜூலை 23 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய  ஐஸ் போதைப்பொருட்களை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற, பாதாள உலகக் குழுத் தலைவர் தெமட்டகொட சமிந்தவின் உறவினரான பெண் ஒருவர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மாளிகாவத்தையில் உள்ள லக் ஹிரு செவன தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி சோதனையிட்ட போதே இந்த   போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது ​தொடர்பாக சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்   தெமட்டகொட சமிந்தவின் போதைப்பொருட்களை பொரளை பகுதிக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரளை பேஸ்லைன் வீதியைச் சேர்ந்த 35-48 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .