2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

கற்பிட்டியில் பீடி இலைகள் பறிமுதல்

R.Tharaniya   / 2025 ஜூன் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி தலவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் 1350 கிலோ அடங்கிய 45 பொதிகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவைகளை கைப்பற்றியதுடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பீடி இலைகளை கொண்டு வந்தவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .