Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 23 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுவா கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) அன்று சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரை ஒதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19)அன்று கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.
37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி இயந்திர படகுகள் பலத்த காற்று மற்றும் புயலில் சிக்கியுள்ளதுடன் இதன்போது இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
மற்றைய ஒரு படகு மற்றும் படகில் பயணித்த 37 மற்றும் 40 வயதுடைய இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதுடன் இலங்கை விமானப் படையினரால் ஹெலிகாப்டர் மூலம் அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே, காணாமல் போனவர்களின் ஒருவருடைய சடலம் மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுவா கடல் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் திடீர் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, காணாமல் போன 40 வயதுடைய மற்றைய மீனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஸீன் ரஸ்மின்
35 minute ago
31 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
31 Jul 2025