2025 மே 02, வெள்ளிக்கிழமை

கான்ஸ்டபிளை போத்தலால் தாக்கிய சாரதி கைது

Janu   / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மதுபான போத்தலை உடைத்து கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மொரகஹஹேன பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்  புதன்கிழமை (18) அன்று கடமை இடைவேளையை அறிவித்துவிட்டு ஹொரண விடுதிக்கு மது அருந்துவதற்காக வந்துள்ளதுடன் அங்கு மேற்படி சந்தேக நபருடன் ஏதோ ஒரு சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து குறித்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹொரண பிரதேசத்தை சேர்ந்த  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X