2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 03 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ போலவத்த பகுதியில் புதன்கிழமை (02) அன்று நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, தொள்ளாயிரம் 900 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு (02) வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், நான்கு (04) மகசின்கள், நாற்பது (40) தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற ஒரு (01) கெப் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு (01) மோட்டார் காருடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
அதன்படி, இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த நம்பகமான ரகசிய தகவலின் அடிப்படையில், வென்னப்புவ, போலவத்த பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு கூட்டு சோதனை நடவடிக்கையின் போது, அந்த பகுதி வழியாக பயணித்த சந்தேகத்திற்கிடமான ஒரு கெப் வண்டியை சோதனை செய்தனர். அப்போது, அந்த கெப் வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சுமார் தொள்ளாயிரம் 900 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு (02) வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், நான்கு (04) மகசின்கள் மற்றும் நாற்பது (40) தோட்டாக்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட மேலதிக தகவல்களின் அடிப்படையில், இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு சந்தேக நபர் (01) ஒரு மோட்டார் வாகனத்துடன் கைது செய்யப்பட்டார்.
 
அதன்படி, இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா இருப்பின் மொத்த தெரு மதிப்பு இருநூற்று இரண்டு மில்லியன் (202) ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
 
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 முதல் 51 வயதுக்குட்பட்ட உலுக்குளம், போத்தானேகம மற்றும் அனுராதபுரம், இஹலகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். சந்தேக நபர்கள், கேரள கஞ்சா, கைத்துப்பாக்கிகள், மகசின்கள் மற்றும் தோட்டாக்கள், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .