Freelancer / 2021 ஜூலை 20 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக இரத்து செய்யுமாறும், பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க வலியுறுத்தியும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்னால், இன்று போராட்டம் நடத்தினர்.
இராணுவத்தால் மற்றவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதும் தற்போதுள்ள பல்கலைக்கழகத்துக்கு இணையாக நாடு முழுவதும் இராணுவ பல்கலைக்கழகங்களை நிறுவுவதை ஆட்சேபித்தே கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம் நடத்தப்படுவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சமன் யாப்பா தெரிவித்தார்.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் இராணுவம் சம்பந்தமான விடயங்களைவிட அதிகமாக கல்வியை வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லைஎன்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதாகவும், பாடசாலை மணவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago