Janu / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 55 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீன நாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த சீன நாட்டவர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய சீன நாட்டு வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
இவர் செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை 12.40 மணியளவில் தாய்லாந்தின் பேங்காக் (Bangkok) நகரிலிருந்து 'எயார் ஏசியா' (Air Asia) விமான சேவைக்கு சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தின் கிரீன் சேனல் ஊடாக வெளியேற முயன்ற போதே சந்தேக நபர் கைது செய்யப்ட்டுள்ளதுடன் அவர் கொண்டு வந்த பயண பொதிகளை சோதனையிட்ட போது, அதில் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட "செப்வோல்வ்ஸ்" வகையான 37,000 சிகரெட்டுகள் அடங்கிய 185 சிகரெட் கார்ட்டூன் அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வர்த்தகரை தடுப்புக் காவலில் வைத்துள்ள சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago