2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சஜித் தான் எனது தலைவன்: ஆனால், நான்தான் சூழ்ச்சிக்காரன்’

Editorial   / 2021 ஜூன் 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸவை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவிக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும், அதில், ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியைச் சேர்ந்த பலரும் அங்கம் வகிக்கவுள்ளனர் எனவும் தகவல்கள் கசிந்திருந்தன. இது அரசியல் அரங்கில் பெரிதும் பேசப்படும் கருப்பொருளாக மாறிவிட்டது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஹரின் பெர்ணான்டோ எம்.பி, திடீரென ஊடகங்களிடம் சிக்கிக்கொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கீழ் கண்டவாறு பதிலளித்தார்.

கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்காத கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவே நியமிக்கப்படுவார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்?

பதில்: “அத்தீர்மானத்தை நிறைவேற்றியவர்களிடம்தான் கேட்கவேண்டும். உண்மையிலே​யே அது முட்டாள்தனமான செயற்பாடாகும்” என்றார்.

“எனது தலைவர் சஜித் பிரேமதாஸ, அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்துவதற்கான விசேடமான காரணம் என்ன? என்பதை  அதனை செய்தவர்களிடம்தான் கேட்கவேண்டும். நான் இருந்திருந்தால் கேட்டிருப்பேன். நான், இரண்டு மாதங்கள் விடுமுறையில் இருக்கின்றேன்” என்றார்.

“தேவையில்லாத பயத்தை தோற்றுவிப்பதற்கு யாருக்கு பைத்தியம் பிடித்திருந்தது என்பதை பார்க்கவேண்டும்” என்றார்.

கேள்வி: ரணிலுக்கு இன்னும் பயமிருக்கிறதா? ​ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் விலகிச்சென்றுவிடுவர் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: அரசியல் நீண்ட அனுபவம் கொண்டவர், மூளைச்சாலியான ரணில் விக்கிரமசிங்கவை, எவ்விடத்தில் கண்டாலும் அவருடன் உரையாடுவேன். ஐ.ம.சத்தியை உருவாக்கியுள்ளோம். ஆனால், அங்கிங்குமிங்கும் பாயும் பைத்தியங்கள் ஐ.ம.சக்திக்குள்ளும் இருக்கக்கூடும் என்றார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ​ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதனூடாகவே ஆட்சியை கவிழ்க்கமுடியும். அவ்வாறில்லாது, அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சி தேவையில்லையென ஐக்கிய மக்கள் சக்தி நினைக்குமாயின் அது முட்டாள்தனமானது. அதேபோல,  ஐக்கிய மக்கள் சக்தி தேவையில்லையென ஐக்கிய தேசியக் கட்சியும் நினைத்தால் அதுவும் முட்டாள் தனமானது.

 இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. அதனை உறுதிசெய்யவேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும். மக்களுக்கு ஏதாவது செய்வேண்டுமாயின் புது நோக்கம் இருக்கவேண்டும் என்றார்.

 

கேள்வி: எதிர்க்கட்சி  ஒன்றுமே செய்யவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

பதில்: “ஒன்றரை மாதங்கள் நான் இருக்கவில்லைதானே அதுதான்” என்றார்.

 

கேள்வி: நீங்கள் உட்பட, 15 பேர் ரணிலுடன் செல்லவிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாரே?

பதில்: இல்லை, அது முற்றிலும் பொய்யானது. ரணிலை நான் மதிப்பவன், அரசியலுக்கு அழைத்தார், எம்.பியாக்கினார். மாகாண சபை முதலமைச்சராக்கினார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கினார். அவருடைய காலத்தில்தான் இவையெல்லாம் நடந்தன. அவருடன் எந்தவொரு பிரச்சினையும் எனக்கில்லை என்றார்.

அவரை காணும் போதெல்லாம் கதைப்பேன்,  அவரை மதிப்பேன். அப்படியாக இருக்கும்போது,  அரசியல் என்றவகையில், சஜித் பிரேமதாஸவுக்கு நான், எதிரானவன் அல்லன் என்றார்.

கேள்வி: உங்கள் கட்சிக்குள் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றனவா?

பதில்: “சூழ்ச்சிகளை செய்வதாக இருந்தால், அதனை நான்தான் செய்வேன், அவ்வாறான சூழ்ச்சிகள் எவையும் இடம்பெறாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .