2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிகரெட்டுகளுடன் அறுவர் கைது

Janu   / 2025 ஜூன் 19 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தின்  "கிரீன் சேனல்" வழியாக 1 கோடியே 6 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட்டுகளை கொண்டு வந்த அறுவர் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (19) அன்று கைது செய்யப்பட்டனர்.

நான்கு ஆண் பயணிகள் மற்றும் இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த பெண்களில் ஒருவர் வெளிநாட்டு பயணி என தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த ஆறு பேரும் துபாய், ஷார்ஜா மற்றும் பாங்காக்கில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன் அவர்களின் பயணப் பையிக்குள் இருந்து 84,000 வெளிநாட்டு "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் அடங்கிய 420 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .