Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 23 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவாமி விபுலானந்தரின் மகத்தான பணியின் முக்கிய நோக்கம், எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஏனையவர்களுக்கு சேவை செய்வதாகும் என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
எனவே, இனம், சாதி, மதம், பாலினம் போன்ற குறுகிய பிரிவுகளுக்குப் பதிலாக, கலாசார அடையாளங்களை மதிப்பதன் மூலம் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும்,
இதற்காக, தமிழ் கலாசார மறுமலர்ச்சியை மேற்கொண்ட சுவாமி விபுலானந்தரின் தத்துவப் பாதையையும், அவரது மகத்தான பணியையும் பயன்படுத்தலாம் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
சுவாமி விபுலானந்தர் துறவறம் பூண்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சிலை திறப்பு விழா யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கௌரச சபாநாயகர் தலைமையில் அண்மையில் (19) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ பாவானந்தராஜா, ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி மற்றும் வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பிரதிசெஞ் அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.
இங்கு சுவாமி விபுலானந்தரின் நினைவாக நினைவு முத்திரை மற்றும் தபாலுறை என்பனவும் வெளியிடப்பட்டன. இந்து சமய மற்றும் இந்து கலாசார திணைக்களத்தினால் யாழ்ப்பாண பிரதேசத்தில் கோவில்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையும் சபாநாயகரின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.
சபாநாயகர் தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது நாகதீப விகாரை, நாகபூஷனி அம்மன் ஆலயம் மற்றும் நல்லூர் கோவில் ஆகியவற்றுக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், யாழ்ப்பாண நூலகத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.
35 minute ago
31 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
31 Jul 2025