2025 மே 12, திங்கட்கிழமை

சொத்துக்களை அபகரித்த பெண் கைது

Janu   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி ஆவணங்களை தயாரித்து 3 ​கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜா-எல, காணுவன பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு 3 க்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமையவே சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  குற்றப் புலனாய்வு துறை மேற்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X