2025 மே 12, திங்கட்கிழமை

துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம்

Janu   / 2025 மே 05 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி வீதிக்கு அருகில், கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் திங்கட்கிழமை (05) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை, கல்கிஸ்ஸை நகராட்சி மன்றத்தின் திடக்கழிவு பிரிவில் பணியாற்றும், தெஹிவளை, ஓபன் பிளேஸ் பிரதேசத்தை சேர்ந்த விஷ்வ என்பவரே வீதி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.  

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X