2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

துப்பாக்கி சூட்டில் வர்த்தகர் காயம்

Janu   / 2025 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை மாவட்டம் கந்தறை, கபுகம பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் துப்பாக்கி சூட்டில் வர்த்தகர் ஒருவர் காயமடைந்து ஞாயிற்றுக்கிழமை (03) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 காயமடைந்த 48 வயதுடைய வர்த்தகர்  பல நாள் மீன்பிடி படகுகளின் மற்றும் பேருந்துகளின் உரிமையாளர் எனவும் கடந்த மார்ச் மாதம் தெவுந்தர பகுதியில் இ்டம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் நெருங்கிய நண்பரின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.  அவரின் மகன் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 ஞாயிற்றுக்கிழமை (03) அன்று காலை 6.30 மணியளவில் குறித்த வர்த்தகர் தனது வீட்டின் முன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X