2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நீதிகோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்கு ஆறு வருடங்கள் நிறைவாகியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என வற்புறுத்தி  நீர்கொழும்பு கட்டுவபிட்டிய  சந்தியில் திங்கட்கிழமை (21) அன்று மாலை 3.30  மணி அளவில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி இருந்தனர்.

இவர்கள் கடந்த பல மாதங்களாக 21ஆம் திகதி இந்த சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இதேவேளை, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் திங்கட்கிழமை (21)  மாலை நடைபெற உள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த  கர்தினால்  மல்கம் ரஞ்சித் அவர்கள்  ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வந்து மக்களிடம் கதைத்ததுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அங்கு மேலும் சிலர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

மாலை 4.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் அமைதியாக கலைந்தது.

எம்.இஸட். ஷாஜஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .