2024 மே 04, சனிக்கிழமை

போலி ஆவணங்களுடன் இருவர் கைது

Mayu   / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரியவன்ச 

மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர ஸ்டிக்கர்கள் போன்ற போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் பதுளையில் ஒரு ஜோடி சிக்கியுள்ளது.

43 வயதுடைய சந்தேகநபரும் 22 வயதுடைய யுவதியும் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்  என குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அகரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், ஆனால் அவர்களுடைய தேசிய அடையாள அட்டைகளில் நான்கு மாகாணங்களின் முகவரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கணவன் மனைவி போல் நடித்து, பதுளை, கனுபலெல்ல, தலதாஎல வீதியில் வீடொன்றை வாடகைக்கு  எடுத்து, அங்கிருந்து, இந்த போலி   ஆவணங்களை பயன்படுத்தி,   இருவரும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.  

 வங்கிக் கடன்களுக்கான போலி ஆவணங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட பணத்தில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாயை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களால் தயாரிக்கப்பட்ட  போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரச வங்கியில் ஏழு இலட்சம் ரூபாய் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .