2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

Princiya Dixci   / 2021 மார்ச் 14 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் க.பொ.த சா.த பரீட்சை விடுமுறையின் பின்னர் மீண்டும் நாளை திங்கட்கிழமை (15) ஆரம்பமாகவிருக்கின்றன. நீண்ட காலத்துக்குப் பின்பு  மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05 ,11 மற்றும் 13ஆம் தர வகுப்புகளும் நாளை ஆரம்பிக்கப்படும்.

அதேவேளை, மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05, 11, 13ஆம் தரங்களை தவிர்ந்த ஏனைய தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

இதற்கமைவாக, தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையிலும் தரம் 06 தொடக்கம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

நாளை திறக்கப்படும் பாடசாலைகள் யாவும் சித்திரைப்புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X