Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 03 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் பாலாவிஉப்பு கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு கோரிக்கை முன்வைத்து புதன்கிழமை (02) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய வாழ்க்கை செலவுக்கு ஏற்றாற் போல கொடுப்பனவுகள் போதுமானது இல்லை என்றும் அவற்றை அதிகரித்து வழங்குமாறும் நிர்வாகத்திடம் பல முறை இவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்ததாகவும், கடந்த 90 நாட்களுக்கு மேலாக இவ்வாறு கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த போதும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருமாறு கோரியே இவர்கள் புதன்கிழமை (02) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் தங்களுடைய பணி பகிஸ்கரிப்பை ஆரம்பித்த ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். சம்பவ இடத்திற்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் வருகை தந்து பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் தொடர்பு கொண்டுஉரையாடினார்.
மேலும் அன்றைய தினம் புத்தளம் பிரதேசஅபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றமையினால் பிரதேச செயலகத்தை நோக்கி வாகனத்திலும் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு பட்டிகளை அணிந்தவாறு பாலாவியிலிருந்து புத்தளம் நோக்கி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்
3 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
8 hours ago