2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

பீடி இலைகள் மீட்பு

Janu   / 2026 ஜனவரி 04 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, களப்பு பகுதியில் இலங்கை கடற்படை வியாழக்கிழமை (01) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​நாட்டிற்கு கடத்தப்பட்ட  இருநூற்று இருபத்து நான்கு கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெளனி நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​களப்பில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஆறு பொதிகள் பரிசோதிக்கப்பட்டன. 

அங்கு, சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருநூற்று இருபத்து நான்கு கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X