R.Tharaniya / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளிக்கிழமை (24) அன்று மாலை4 மணி வரையிலான நிலவரப்படி, சுமார்149 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் 19 கிராமசேவகர்பிரிவுகளில், சுமார்149 குடும்பங்களைச் சேர்ந்த 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 2 கிராமசேவகர்பிரிவுகளில் 93 குடும்பங்களை சேர்ந்த 304 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹாவெ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 1 கிராமசேவகர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும்,நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராமசேவகர்பிரிவுகளில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும்,நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 1 கிராமசேவகர்பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 18 பேரும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஒரு கிராமசேவகர்பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும்,ஆராச்சிக்கட்டுவ பிரதேசசெயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராமசேவகர்பிரிவுகளில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும்,சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராமசேவகர்பிரிவுகளில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஒருகிராமசேவகர்பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும்,மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும்,மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒருகிராமசேவகர்பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்டஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேரஅதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சிலாபம் பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அம்பகந்ததவள மற்றும் சவரானகிராமசேவகர்பிரிவில் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது டன், புத்தளம் மாவட்டத்தில் மொத்தமாக 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக வும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,நாத்தாண்டிய பிரதேசசெயலகத்தின் தெற்குமுதுகட்டுவபிரிவில் உள்ள கால்நடை அலுவலகவளாகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிலாபம் சவாரானபகுதியில் உள்ள சமூக மண்டபம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஸீன் ரஸ்மின்
10 minute ago
29 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago
33 minute ago
2 hours ago