2025 மே 01, வியாழக்கிழமை

புத்தளத்தில் விபத்து; இருவர் காயம்

Editorial   / 2021 நவம்பர் 07 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

நொச்சியாகம - செட்டிக்குளம் வீதியின் ஒயாமடுவ வீதியில் இன்று (07) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

புத்தளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒயாமடுவ வீதி ஊடாக மன்னார் நோக்கிச் சென்ற இ.போ.சபையின் மன்னார் சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்த்திசையில் இருந்து பயணித்த வான் ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் வான் சாரதி மற்றும் வான் சாரதிக்கு அருகில் இருந்து பயணம் செய்த ஒருவரும் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடரும் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்த ஒயாமடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திமுது குணசேகர, வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஒயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .