Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 மே 12 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், கற்பிட்டி - முகத்துவாரம் கடற்பகுதியில்இருந்து ஒருதொகை பீடிஇலைகள்சனிக்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளன.மேலும், இக் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவன கடற்படை சிறப்புத் தேடுதல் மற்றும் மரைன் படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திர படகுகளை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த டிங்கி இயந்திர படகுகளில் இருந்து 14 உரப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 497 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 41 வயதுடைய கற்பிட்டி, ஆனவாசலை மற்றும் மாம்புரி ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கி இயந்திர படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
50 minute ago
51 minute ago