2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

மகாத்மா காந்தி பொதுப்பணி மன்ற அங்கத்தவர்கள் மேயரை சந்தித்தனர்.

Editorial   / 2025 ஜூலை 29 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தி பொதுப்பணி மன்றத்தின் அங்கத்தவர்கள் கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கேலி பால்தாசர் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினர்.

 இந்த சந்திப்பின் போது  கொழும்பு ஜிந்துபிட்டி  இராம்லால் மகாராஜா தர்ம சத்திறத்தின் முன் வாசலில் மகாத்மா காந்தியின் உருவ சிலை வைப்பது சம்பந்தமாகவும் மன்றத்தின் செயல் திட்டங்கள் பற்றிய விபரங்கள் தெளிவு படுத்தப்பட்டது

 அதற்கு உதவிகளை செய்வதாக மேயர்  ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பை தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்த ராஜா நாராயணப் பிள்ளை  ஏற்பாடு செய்திருந்தார்.நகர சபை உறுப்பினர் A.P.செல்வமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

 மன்றத்தின் மாதர் அணி தலைவி மிகிரீ மேனகா,  மேயருக்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்தார். மன்ற தலைவர் ஜோசப் j.p,  மகாத்மா காந்தியின் உருவ சிலை வைப்பது சம்பந்தமாக மேயருக்கு விளக்கப் படுத்தினார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .