2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மழையால் ஏற்பட்ட சேதம்...

Freelancer   / 2021 ஜூலை 10 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை டயகம மன்ராசி ஹோல்புறூக் ஆகிய பிரதேசத்தில் பெய்த கடும் மழையால் ‌ஆகுரோயா ஆற்றின்  நீர் மட்டம்  உயர்ந்ததன் காரணமாக  பசுமலை பகுதியில் பத்து வீடுகள் நீரில் மூழ்கிதோடு அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.

விளையாட்டு மைதானம் உட்பட விவசாய காணிகள் அனைத்தும் வெள்ள காடுகளாக  காட்சியளித்தன. ஊட்டுவள்ளி‌ தோட்டத்தில் உள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததில்  25க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பச்சை பங்களா தோட்டத்தில் மாட்டுத் தொழுவம் நீரில் மூழ்கியதால் அங்கு இருந்த 2 ஆடுகள் பரிதாபமான நிலையில் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதேவேளை மலையக பிரதேசத்தில் சில இடங்களில் சிறுசிறு மண்மேடு சரிந்து விழுந்தமையும் குறிப்பிடத்தக்கது .

பாதிக்கப்பட்ட மக்களை பொதுவான இடங்களில் தங்க வைப்பதற்கான தோட்ட நிர்வாகம் கிராம சேவகர்கள் மற்றும் பொலீஸ் அக்கரப்பத்தனை பிரதேச சபை நடவடிக்கை முன்னெடுத்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பசுமலை பகுதியில் அதிக வெள்ளநீர் நிரம்பியதால் வாகனங்களும் நீரில் மூழ்கியதோடு,  வீடுகளில் இருந்த அதிகமான பொருட்கள் சேதம் ஆகியது. மேலும் வீடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதிலும் குடும்ப உறுப்பினர்கள் பெரும் சிரமப்பட்டனர். தற்போது நிரம்பி இருந்த நீர் வடிந்து வருவதை காணக் கூடியதாக உள்ளது.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .