Janu / 2025 ஜூலை 23 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலஹிடியாகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக கபுகொல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் கலஹிடியாகம, கபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த மலிது நிம்சார நிர்மல் சுரவீர (19 வயது) என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் அறுவடை இயந்திரத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இவ்வாறு மின்சாரம் தாக்கத்திற்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லை எனவும் அவரது வீட்டைக் கடந்து சென்ற உறவினர் ஒருவர் , தரையில் விழுந்து கிடந்த இளைஞனை கண்டு அருகிலிருந்த வீட்டாருடன் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago