Janu / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பயணப் பொதிகளை இறக்கும் பகுதியில் (லக்கேஜ் டிரக்) கைவிடப்பட்ட பயணப் பையில், இருந்து 20 கோடி 90 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய "குஷ்" போதைப் பொருள் தொகையை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தை சேர்ந்த "மெக்ஸ்" என்ற அதிகாரப்பூர்வ நாயினால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குறித்த பயணப் பையைக் கொண்டு வந்த பயணி சனிக்கிழமை (06) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பயணி போதைப்பொருளுடன் தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன், ஏதோ ஒரு காரணத்திற்காக, பயந்து தனது பையைக் கைவிட்டு தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
கைவிடப்பட்ட பயணப் பைகள் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியில் இருந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ நாய், குறித்த பயணப்பையை பார்த்து "குறைக்கத் தொடங்கியுள்ளது".அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் பயணப் பையை கைப்பற்றி சோதனையிட்ட போது, இந்த "குஷ்" போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பையின் உரிமையாளரான ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தங்கியிருந்த போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த பயணப் பையில் இருந்து 19 பொதிகளில் இருந்து மறைக்கப்பட்ட 20 கிலோ 900 கிராம் "குஷ்" போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது
சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டி.கே.ஜி. கபில

3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago