2025 மே 01, வியாழக்கிழமை

மெய்நிகர் கலை நிறுவுதல், புகைப்படக் கண்காட்சி

Freelancer   / 2021 செப்டெம்பர் 25 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முடக்கப்பட்ட நிலையில் பிள்ளைகள்“ கலை  விழாவின் ஒரு பகுதியாக ஸ்டேஜர்ஸ் தியேட்டர் குரூப் நிறுவனமானது நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கான மெய்நிகர் கலை நிறுவுதல் மற்றும் புகைப்படக் கண்காட்சியொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

இக்கண்காட்சியானது முடக்கப்பட்ட நிலையில் உள்ள பிள்ளைகளின் அனுபவங்களையும் அவர்களது பார்வைகளையும் மையப்படுத்தியதாக இருக்கும் என்பதுடன், இது நெறிப்படுத்தப்பட்டு மெய்நிகராகப் பரப்பப்படும் ஒரு திறந்த மூல எண்ணியல் கண்காட்சியாகும்.

இக்கண்காட்சிக்கு 18 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களும் செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரிகள் கீழ் கொடுக்கப்பட்ட இரு தலைப்புகளில் ஒன்றின்  கீழ் 4 கலைப் படைப்புக்கள் வரை அனுப்ப முடியும். 

1. முடக்கப்பட்ட காலத்தில் கண்ட சிறந்த/மோசமான அனுபவம்

2. தொற்று நோய் நாட்களில் உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகள் 
கலைப்படைப்புகள் பின்வரும் பிரிவுகளின் கீழ் அடங்கலாம்:

இயற்கலை- (வண்ணப்பூச்சு ஓவியங்கள், கீறல் ஓவியங்கள் (sketches) ,வரைதல்கள். கை கிறுக்கல் ஓவியங்கள், பொதுச்சுவரில் தீட்டப்பட்ட ஓவியங்கள் மற்றும்  ஏனையவற்றை உள்ளடக்கிய) 

எண்ணியல் கலை- (கிராபிக்ஸ், டிஜிட்டல் கொலாஜ் மற்றும் கணினி மூலம் வடிமைக்கப்பட்ட எந்த படைப்பையும் உள்ளடக்கிய) 

கலைகளும் கைவண்ணங்களும்- சிற்பங்கள்,பானைக் கலைகள், துணிகளில் செய்யப்படும் கைவண்ணங்கள் மற்றும்/அல்லது ஏனைய அலங்காரக் கலை வடிவங்கள் என்பவற்றை உள்ளடக்கிய) 

புகைப்படங்கள்  மற்றும்  ஏனையன-  (காட்டூன் மற்றும் சிறு ஓவியக் கதைகள் (comics), மற்றும்  ஏனைய எண்ணியல், இயற்பில் என்பவற்றின் அடிப்படையிலான கலைப்படைப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய) 

விண்ணப்பதாரிகள் விரும்பினால்  தமது கலைப்படைப்புகளுடன் சேர்த்து தமது படைப்புகளும் அது சார்ந்த அனுபவங்களும் தமக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கி 30 நொடி அளவிலான காணொளி ஒன்றினை அனுப்பலாம்.

உங்களது கலைப்படைப்புகளை ஸ்கேன் மற்றும் தெளிவான புகைப்படங்கள் வாயிலாக  HYPERLINK "http://www.stages.lk/application-form இல் பெற்றுக்கொள்ளக்கூடிய இணைய படிவத்தினூடாக அனுப்ப முடியும். 

அதில் கலைப்படைப்பின் தலைப்பு, விண்ணப்பதாரியின் பெயர், வயது, பிறந்த  நாள், பள்ளி மற்றும் தொடர்பு கொள்ளும் வழிகள் என்பன அடங்கியிருக்க வேண்டும்.  

மேலதிக விவரங்களுக்கு info@stages.lk என்ற மின்னஞ்சல் இலக்கத்தின் மூலம் அல்லது 076 611 1184 என்ற அலை பேசி இலக்கத்தின் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

Facebook: https://www.facebook.com/StagesTheatreGroup
Instagram: https://www.instagram.com/stagestheatregroup/


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .