2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரயில்வே அதிகாரியின் தாடையை வெட்டிய வடை வியாபாரி

Janu   / 2025 ஜூலை 07 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் ரயிலில் டிக்கெட் எடுக்காமல்  வடை விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர்  ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் தாடையை கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை (04)   இரவு இடம்பெற்றதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில்வே அதிகாரி  ரயிலில் பயணித்த பயணிகளின் டிக்கெட்டுகளை  சரி பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​வடை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது கண்டறியப்பட்டு, சந்தேக நபரை பிடித்துள்ளார்.   

இதன்போது, வடை விற்பனையாளர் வெங்காயம் வெட்ட பயன்படுத்தும்  கத்தியால், பாதுகாப்பு அதிகாரியின் தாடையை வெட்டி காயப்படுத்தியுள்ளதுடன் பின்னர் ஏனைய அதிகாரிகளின் உதவியுடன் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ரயில், பொல்கஹவெல ரயில் நிலையத்தில் நின்ற போது, ​​சந்தேக நபர் கத்தியுடன் பொல்கஹவெல பொல்கஹவெல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .