2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ரூ.600,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 28 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூ.600,000 மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த, இரு இலங்கை விமானப் பயணிகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.

துபாயிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திங்கட்கிழமை (28) அன்று வந்து அனைத்து சோதனைகளையும் முடித்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட போது  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இரண்டு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் தொழிலதிபர்கள், அவர்களில் ஒருவர் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர். மற்றவர் 42 வயதுடைய கொத்ரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்.
அவர்களின் பொருட்களில் 40,000 "பிளாட்டினம்" மற்றும் "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .