2025 ஜூலை 03, வியாழக்கிழமை

விஸ்கி மற்றும் சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Janu   / 2025 ஜூலை 02 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியுடைய  விஸ்கி மற்றும் சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து,  "கிரீன் சேனல்" வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு வர முயன்ற  இருவர் செவ்வாய்க்கிழமை (01)  இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வர்த்தகர்கள் என தெரியவந்துள்ளதுடன் அதில் ஒருவர் கொழும்பில் வசிக்கும் 30 வயதுடையவர் எனவும் மற்றையவர் எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் துபாயிலிருந்து  எமிரேட்ஸ் விமானம்  மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன் அவர்களின் பயணப் பைகளை சோதனையிட்ட போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் 116,200 அடங்கிய 581 அட்டைப்பெட்டிகள், துபாய் விமான நிலைய வரி இல்லாத வணிக வளாகத்தில் இருந்து வாங்கப்பட்ட 117 விஸ்கி போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள்  தெரிவித்தனர். 

டீ.கே.ஜி. கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .