2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

Janu   / 2025 ஜூன் 23 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்மீமன, ஆனங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது திங்கட்கிழமை (23) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் வீட்டின் ஜன்னல் ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 9 மிமீ துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் இது தொடர்பாக அக்மீமன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .