2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா – 2014

A.P.Mathan   / 2014 மார்ச் 21 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ஊடகத்துறையை சார்ந்த பல பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன. இதற்கான பத்திரிகைச் சந்திப்பு மார்ச் 8, 2014 அன்று வாணிமஹாலில் நடைப்பெற்றது.

• விளம்பர படங்கள் (Ad film) • குறும்படங்கள் (Short film) • முழு நீளத்திரைப்படம் (Featurefilm) • விளக்கத்திரைப்படம் ((Documentary film)

(CWIFF) பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அனைத்து வகையான படங்களையும் வரவேற்கிறது. இவ்விழாவில் ஆண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்கள் அனுப்பும் திரைப்படங்களுக்கு பதிவுத் தொகையில் சிறப்பு சலுகை உண்டு. மேலும் மாணவர்கள் தரும் திரைப்படங்களுக்கு தனி முன்னுரிமை அளிக்கப்படுவதோடு அவர்கள் திரைப்படங்களை ஒரு நாள் முழுவதும் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் நீதிபதிகள் குழுவினரால் தேர்வுசெய்யப்படும். இத்திரைப்பட விழாவுக்கான திரைப்படங்கள் பிவிஆர் திரையரங்கிலும் ஆர்.கே.வி, ரிவ்யு அரங்கிலும் திரையிடப்படும்.

திரைப்படங்களை பதிவு அஞ்சல் மற்றும் www.cwiff.com என்ற இணையத்தளம் மூலமாக அனுப்பலாம். படங்களை அனுப்ப வேண்டிய கடைசி திகதி ஏப்ரல் 15, 2014. இத்திரைப்பட விழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசு தொகையும் விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இலங்கையை சேர்ந்த படைப்பாளிகள் மேலதிக விபரங்களுக்கு இந்த நிகழ்வின் ஆலோசனை சபை உறுப்பினராகவும் சர்வதேச ஊடக இணைப்பாளராகவும் இருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மினுடன் தொடர்புகொள்ளலாம் (0094 771600795, vtvasmin@gmail.com).


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .