2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'அழிவடைந்த கலைகளை மீண்டும் வளர்க்க உதவுவேன்'

Kogilavani   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

அழிந்துபோன கலைகளை மீண்டும் வளர்ப்பதற்கு உதவி புரிவதாக வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி பேராயர் யோசப் ஸ்பிற்றறி தெரிவித்தார்.

யாழ்.திருமறைக் கலாமன்றத்தினால் ஓவியக்கூடம் உள்ளடக்கிய கலைத்தூது முற்றம் ஞாயிற்றுக்கிழமை (01) காலை திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யாழிலுள்ள கலைகளை வளர்ப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அழிந்துபோன கலைகள் மீண்டும் வளர்ப்பதற்கான திட்டங்களை வத்திக்கானில் ஆராய்ந்து அதற்கான உதவிகளை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், ஓவியக்கூட்டத்தில் ஈழத்து ஓவியர்களின் ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .